Latest News

May 13, 2015

பங்களாதேஷில் இணையத்தள எழுத்தாளர் வெட்டுக் கத்தியால் வெட்டிப் படுகொலை
by admin - 0

வட கிழக்கு பங்களாதேஷில் இணையத்தள எழுத்தாளர் ஒருவர் வெட்டுக் கத்தியால் வெட்டி செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டுள்ளார்.
இத்தகைய தாக்குதலொன்று அந்நாட்டில் இடம்பெறுவது இந்த வருடத்தில் இது மூன்றாவது தடவையாகும்.

வட கிழக்கு பங்­க­ளா­தேஷில் இணை­யத்­தள எழுத்­தாளர் ஒருவர் வெட்டுக் கத்­தியால் வெட்டி செவ்­வாய்க்­கி­ழமை கொல்­லப்­பட்­டுள்ளார்.

ஆனந்த பிஜோய் தாஸ் என்ற மேற்படி எழுத்தாளர் சைல்ஹெட் நகரில் முகமூடியணிந்த ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் முக்தோ மொனா என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளை வெளியிட்டு வந்துள்ளார். அந்த இணையத்தளத்தில் எழுதிவந்த பிறிதொரு எழுத்தாளரான அவ்ஜித் ரோய் கடந்த பெப்ரவரி மாதம் கும்பலொன்றால் வெட்டுக் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவ்ஜித் ரோய் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்த அவரது மனைவி தனது பெருவிரல் ஒன்றை இழந்திருந்தார். 

மேலும் பிறிதொரு இணையத்தள எழுத்தாளரான வஷிகுர் ரஹ்மான் கடந்த மார்ச் மாதம் தலைநகர் டாக்காவில் வைத்து ஆயுததாரிகளால் வெட்டுக்கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார். 

ரோயின் மரணம் தொடர்பில் மதவாதியொருவரும் ரஹ்மானின் படுகொலை தொடர்பில் இரு மதப் பாடசாலை மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments