Latest News

May 19, 2015

பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் அறிமுகம்
by Unknown - 0

சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கூட்டம் மும்பையில் 2 நாட்கள் நடந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கும்ப்ளே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த எல்லா உறுப்பு நாட்டு கிரிக்கெட் சபைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை குழு ஏற்க மறுத்து விட்டது.

ஹெல்மெட் உள்பட வீரர்களின் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஒருநாள் போட்டியில் பேட்டிங் பவர் பிளேயை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
« PREV
NEXT »

No comments