Latest News

May 19, 2015

பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளியேன்-மைத்திரி
by Unknown - 0

பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த அரச தலைவர்கள் சகலரையும் தான் மதிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த அரச தலைவர்கள் சகலரையும் தான் மதிப்பதாகவும் அதற்காக உயிர்தியாகம் செய்த முப்படையினரையும் நினைவுகூர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டும் ஒன்றோரு ஒன்றாக இணைந்து முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.  தேசிய பாதுகாப்புக்காக முன்னெடுக்கவேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கமாட்டேன் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறினே, பாதுகாப்பு படைகளின் மனித வளங்கள் மேம்படுத்தப்படும் என்பதுடன் பௌதீக வளங்களும் பெற்றுகொடுக்கப்படும் என்றும் கூறினார். 

இதேவேளை, நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டுடிய சகலவற்றையும் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் மற்றுமொரு அத்தியாயத்துக்கான பக்கம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments