Latest News

May 11, 2015

முழுமை பெற்றதாக மீள்குடியேற்றம் இடம்பெறுமா?
by admin - 0

தற்போதைய பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு 2006 சித்திரை மாதம் கொழும்பில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் காரணமாக மறுநாள் பழிவாங்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதி நோக்கி சரமாரியான ஷெல், பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அலறியடித்து உடுத்த உடுப்புடன் கையில் எடுத்தவற்றுடன் ஓடிய சம்பூர் மக்கள் இடம் பெயர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான நம்பிக்கையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான நீண்ட இடப்பெயர்வையும் அகதி வாழ்வையும் சந்தித்த இந்த மக்களின் மீள்குடியேற்றம் எவ்வகையில் நிகழப்போகின்றதுஎன்ற கேள்வி எதிர்பார்ப்புகள் உள்ளன…?



சம்பூர் மக்களின் காணியை விடுவிக்க அனுமதி


கிழக்கு மாகாணத்தில் சம்பூர் பகுதியில் இலங்கை முதலீட்டு சபை வசம் இருந்த 818 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்ற வர்த்தமானி அறிவித்தலில் வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன கைச்சாத்திட்டுள்ளார். அதன்மூலம் இந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இறுதிவரை பல்வேறு மறைமுக தடைகள் வந்தவண்ணமே இருந்துள்ளன என்ற செய்தியும் பின்புலத்தில் உள்ளன. அதன்படி அன்று முதல் பொது மக்கள் தமது நிலங்களை சென்று பார்வையிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜெயசூரிய ஆகியோர் வியாழனன்று ஜனாதிபதி செயலாளர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பூரில் இலங்கை முதலீட்டு சபை வசம் இருந்த 818 ஏக்கர் பொது மக்களின் காணியை விடுவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டுள்ளார். 


மேலும் சம்பூர் மக்கள் தமது நிலங்களை சென்று பார்வையிடுவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான அறிவிப்பு வரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இடம் பெயர்ந்த மக்களை கடந்த புதன்கிழமை சந்தித்து குறிப்பிட்டிருந்தார்.


இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வியாழனன்று தெரிவிக்கையில் சம்பூர் காணியை அரசாங்கம் பொதுமக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்திருந்தோம். கடந்த அரசாங்கத்திடம் நாம் பல தடவைகள் தெரிவித்திருந்தும் அவை நிறைவேறவில்லை.


இந்நிலையில் நானும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர், முதலீட்டு சபைத் தலைவர் ஆகியோர் ஜனாதிபதி செயலாளர் தலைமையில் கலந்துரையாடியிருந்தோம். அதேபோல் எமது காரணங்களை ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தோம். அதற்கமைய ஜனாதிபதி கிழக்குமாகாணத்தின் சம்பூர் பகுதியில் இலங்கை முதலீட்டு சபை வசம் இருந்த பொதுமக்களின் 818 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டுள்ளார்.


கடற்படை வைத்துள்ள காணியையும் விடுவிக்க நடவடிக்கை?

இதேவேளை, சம்பூர் பகுதியில் கடற்படை வசமிருந்த நிலப்பகுதி இன்னும் ஆறு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார். சம்பூரில் கடற்படை வசம் இருக்கும் 237 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில் கடற்படை வசமிருக்கும் 237 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். கடற்படை முகாமை முழுமையாக நகர்த்துவதற்கு சுமார் ஆறு மாதகாலம் தேவையாகவுள்ளது. அதன் பின்னர் அப்பகுதியில் பொது மக்கள் குடியமர்த்தப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை இராணுவம் செய்து கொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.


இக்கடற்படை முகாம் உள்ள பகுதியில் மிகப்புராதனமான காலம் மக்கள் வாழும் பகுதியும் மற்றும் முக்கியமான பொது அமைப்புக்களும் அமையப் பெற்றுள்ளன. இம்மக்களின் கல்வி நிறுவனங்களான ஸ்ரீமுருகன் வித்தியாலயம், சம்பூர் மகா வித்தியாலம் என்பனவும் அமைந்துள்ளன. மகாவித்தியாலயம் கடற்படையினரின் பயிற்சி முகாமாகவுள்ளது. இப்பகுதிக்குள்ளேயே அதிகளவிலான மக்கள் வாழ்ந்த இடமாகவுள்ளன. சுமார் 634 குடும்பங்கள் அங்கு முன்னர் இருந்திருக்கின்றன. ஏனைய பகுதியில் 200 குடும்பங்கள் வரை வாழ்ந்ததுடன் வீட்டுத்தோட்டங்களும் இருந்துள்ளன. இதற்கிடையில் மக்கள் வெளியேறும் போது இவ் வெண்ணிக்கை இருந்தாலும் தற்சமயம் அதாவது 10 வருடங்களின் பின்னர் 150 இற்கும் அதிகமான புதிய குடும்பங்களும் தற்போது உருவாகியுள்ளன. இந்நிலையில் இம்மக்களின் மீள்குடியேற்றமும் பல்வேறு சவால்களைக் கொண்டதாகவே இருக்கப்போகின்றது என்ற சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன.


முறையான மீள்குடியேற்றத்திட்டம் நிதி உண்டா?


கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டதான மீள் குடியேற்றம் என்பது முழுமை பெற்ற ஒரு நடவடிக்கையாக கொள்ளப்படவில்லை. அவற்றின் தாக்கங்களை இன்னும் மக்கள் வடகிழக்கு ரீதியாக அனுபவித்த வண்ணமே உள்ளனர். பலவந்தமாக அரசினால் நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் வெளியேற்றப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் என்பது ஒரு திட்டமிட்டவகையில் அவர்களது மீௌழுச்சிக்கு வித்திட வேண்டும் என்பது ஐ.நா.வின் அடிப்படை சாசனங்களில் குறிப்பிடப்படுகின்றன. 


மீள்குடியேற்றம் என்றவுடன் அடிப்படை வசதிகள் யாவும் பூர்த்தி செய்யப்பட வேண்டியது கட்டாயமானதாகும். சுகாதார வசதிகள், மலசலகூடவசதிகள், குடிநீர் வசதிகள், போக்குவரத்து, இருப்பிடத்திற்கான தற்காலிக கொட்டில், நிரந்தர வீடு, கல்விக்கான அடிப்படை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் முக்கியமான வாழ்வாதார வசதிகள் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும்.


இவற்றுக்கெல்லாம் மேலாக மக்களின் உளவியல் பாதிப்பு என்பன இல்லாமல் செய்வதற்கான ஒழுங்குகள் இருக்க வேண்டும். கடந்தகாலத்தில் உளவியல் பாதிப்பை சீர் செய்யும் எந்த நடவடிக்கைக்கும் அரசு பகிரங்கமாக அனுமதி அளிக்கவில்லை. மக்கள் பற்றியும் அவர்கள் மனோநிலை பற்றியும் கவலைப்படவில்லை. இவை சார் திட்டங்களை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கவில்லை.


சம்பூரைப் பொறுத்தவரை முற்றிலும் தோட்டம் துரவு, மீன்பிடி, கால் நடை, விவசாயம் என செல்வம் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது. பலவும் சம்பூரணமாக இருந்தமையினால் தான் சம்பூர் என்ற பெயர் மருவி வந்ததாக வரலாறு கூறுகின்றது. 


பாலைவனமாக உள்ள சம்பூர்


இன்று எதுவுமே அற்ற பாலைவனமாக சம்பூர் உள்ளது. பல இடங்களில் நிழலுக்கும் கூட மரங்கள் இல்லை எனவும் இருந்த வீடுகள், மா, பலா, வாழை போன்ற மர வளங்கள் அழிக்கப்பட்டன. மனித நடமாட்டங்களை இல்லை என நிரூபிக்க கடந்த அரசு முனைந்ததனால் வளமான நிலத்தில்கூட வீட்டு கழிவுகள் புதைக்கப்பட்டு வாழ்விடத்தின் வளமும் கடந்த அரசினால் சேதமாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பல முறை இது மக்கள் இல்லாத இடமென்றும் கடந்த ஆட்சிக்காலத்தில் பல முக்கியமான இடங்களில் அறிக்கையிடப்பட்டு வந்தது. 


இவ்வாறான சூழலில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்றம் புதிய புரிந்துணர்வுள்ள அரசினால் ஒழுங்கமைக்கபட்ட வகையில் இடம் பெறுமா? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது.



இன்றும் ஏலவே மீள்குடியமர்ந்த மக்கள் தங்களது காணி, நிலையான வாழ்வாதாரம், நிரந்தர வீடு என்பன பற்றி கவலையான அவலமான செய்திகளையே வெளியிட்ட வண்ணமுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு அனுபவங்கள், தமிழ் அரசியல் பிரதி நிதிகளின் பங்கு பற்றுதலுடன் குறைந்த தடைகளுக்கு மத்தியில் மேற் கொள்ளப்படும் மீள்குடியேற்றம் எந்தளவு திட்டமிட்ட வகையில் நீண்டகால அவலத்தில் தள்ளப்பட்டிருந்த மக்களின் அடிப்படை உரிமைகள்,அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும் என்பது பலருக்குமுள்ள எதிர்பார்ப்பாகவுள்ளன.



கடந்த அரசால் மீழ்குடியேற்றப்பட்ட மக்களின் நிலை?


கடந்த அரசானது நிறைய நிறுவனங்களின் பங்களிப்பையே அதிகம் பெற்று அரைகுறையான பணிகளை செய்துள்ளமை தற்சமயம் வெளி வரும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளால்உண்மையாகி வருகின்றன.. பல இடங்களில் இன்னும் தற்காலிக கொட்டில்கள் இல்லை.நிரந்தர வீடு இல்லை. வாழ்வாதரமில்லை என்ற கோசங்கள் போராட்ட வடிவங்களுக்குள்ளாக வட கிழக்கு ரீதியாகதினம்தினம் வெளிப்பட்ட வண்ணமுள்ளன.பலருக்கு காணிகளுக்கான அடிப்படை ஆவணங்கள் துரிதமாக வழங்காமையினால் நிறுவனங்களின் வீடுகளும் கிடைக்கவில்லை. என்பதுடன் குறித்த நிறுவனங்களும் கடந்த ஆட்சிக்கால மனித உரிமை மீறல்கள் வெளியாகிவடும் என்பதற்காக அந்த ஆட்சியில் துரத்தப்பட்டு விட்டன.


வியாழனன்று தமிழ்   கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் போன்றோர் திருகோணமலைமாவட்டத்தின் கோமரங்கடவல பகுதியில் உள்ள சாந்திபுரம்,நொச்சிக்குளம் போன்ற கிராமங்களுக்கு விஜயம் செய்தனர். அங்கு இன்னும் பலருக்கு தற்காலிக வீடுகள் கூட வழங்கப்பட வில்லை பலருக்கு நிரந்தர வீடுகள் இல்லை. வாழ்வாதாரம் தரும் வயல்நிலங்களில் பலர் அத்துமீறியுள்ளனர் என்ற செய்தியும் மக்களால் முறைப்பாடாக சொல்லப்பட்டுள்ளன. உடைக்கப்பட ஆலயம் புனரைமைக்க நிதியில்லை என்றும் நேரடியாக சுட்டிக்காட்டியுளளனர்.

கடந்த இருவாரங்களுக்குமுன்னர் திருகோணமலையின் தென்பதியான வெருகல் பிரிவில் உள்ள சீனன் வெளி .உப்பூறல்,நல்லுார், இலங்கைத்துறை இலங்கைத்துறமுகத்துவாரம் போன்ற கிராமங்களில் சிறியளவில்இரால் பிடிக்கும் இரால் தொழிலுக்கு தடைவிதிக்கப்பட்டமை தொடர்பான செய்தி அம்மக்களின் பிச்சைப் பெட்டியில் விழுந்த அடியாக விருந்தன. 


அதனை விட்டால் வெறு வழி தொழில் தெரியாது எமக்கு எனவும் இது எமது பாரம் பரிய தொழில் எனவும் குறிப்பிட்டனர்.இவர்கள் முறற்றாக இடம் பெயர்ந்து 2008 இல் மீழ்குடியமர்ந்தவர்கள் ஒரு கிராமத்தில் 120 குடும்பங்கள் உள்ளன. முற்றாக மீன் பிடி செய்பவர்கள் அனால் படகுகள் மட்டு மே இது வரை நிறுவனமொன்றின் மூலம் வழங்கப்பட்டுள்ளன. தமது பரந்த கடலில் வெளி மீனவர்கள் மீன் பிடிக்க பார்வையாளர்களாக நாமிருக்கின்றோம் என மீனவ சங்க பிரதிநிதி கவலை வெளியிட்டதுடன் பிச் சைப்பெட்டியான தொட்டண்டி எனும் எமது இரால் பிழைப்பையும் அரசைின் பெயரால் தடை செய்ய அதிகாரிகள்முயற்சிக்கின்றனர். எனவும் குறிப்பிட்டனர். 


இந்த நிலையில் தான் கடந்த அரசின் முடிக்கப்பட்ட மீழ்குடியேற்றமும் வாழ்வாதார நடவடிக்கையும் உள்ளன. இவ்வாறான கிராமங்களில் தற் கொலைகள் சிறுவர் துஸ்பியோகங்கள்,பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடைவிலகல் ,இழவயது திருமணம் போன்ற புதிய கலாசாரமும் அதிகமான மதுபாவனையும் குடும்ப பிளவுகளும் பெருக ஆரம்பிக்கின்றன. இவை முறையான மீழ்குடியேற்றமின்மையின் விளைவுகள் தான் என்பதனை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எவ்வாறு அமையப்போகின்றன மீழ்குடியேற்றம்


இந்த நிலையில் கடந்த அரசின் விருப்பிற்கு அமைவாக ”மாற்று இடங்களில் குடியமர மறுத்தார்கள் சம்பூரையே கேட்டு நிற்கிறார்கள்” என்பதற்காக கடந் த மூன்று வருடங்களாக நிவாரண உதவி கூட வழங்காமல் சிறைச்சாலைக்கைதிகளாக இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படடிருக்கின்ற இந்த மக்களின் மீழ்குடியேற்றம் எவ்வாறான வகையில் மேற் கொள்ளப்பட வேண்டும் என்ற திட்டமிடல் மற்றும் வழங்கள் தேவை என்பது தற்போதய ஆட்சியாளர்கள்,பங்குதாரர்களின் கைகளில் உள்ளன. சம்பூரைப் பொறுத்தவரை ஆனைத்தும் அ..முதல் ஆகேனாவரை புதிதாக எற்படுத்த வேண்டிய நிலமை உள்ளன.உதாரணமாக பிரசித்தி பெற்ற சம்பூர் பத்திரகாளியும் காட்டுத்தேங்காய் மரமும்தான் மிஞ்சியுள்ளன. ஆலயம் முற்றாக எறிகணை வீச்சில் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளன.


பாரிய நீ்ர் விநியோகத்திட்டம் சம்பூர்கடற்படைகாமுகாமுடன் நிற்க்கின்றன. கூனித்தீவு வரை அவை விஸ்தரிக்கவேண்டியுள்ளன. முக்கியமாக காணி ஆவணம் வீடு வாழ்வாதாரம் கல்விக்கான அடிப்படை வசதி என்பனவும் வாழ்வாதார வசதிகளும் முக்கியமாகவுள்ளன.குறிப்பாக சுமார் 184 குடும்பங்கள் மீனவர்கள் கரைவலை டகுத்தொழில் என்பன வரும் காலத்திலும் சவாலானவையாகவே இருக்கப்போகின்றன. ?என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளன. ஏனெனில் கடல்படை பயிற்சி முகாம் நிரந்தரமாக இருக்கப்போகின்றன. இடம் மட்டும் தான் நகரப்போகின்றன. அப்படியானால் அப்பகுதியில் பாரம் பரியமாக தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் நிலமை என்ன ? இதனை விட பாரிய சவாலாகபோகின்ற அனல் மின்னிலயம் சுமார் 3 கிலோமீ்றரில் அமைக்க உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளன. அதற்கான எதிர்ப்பபை சம்பூர் தவிர்ந்த அயல்கிராம மக்கள்ஏலவே போராட்டம் மூலம் வெளிப்படுத்த ஆரம்பி் த்து விட்டனர்.கடந்த இருவாரத்திற்கு முன்னரும் சம்பூருக்கு அருகில் உள்ள நாவலடிச்சந்தியில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெற்றன.?இது அமைந்தால் முழ மூதுார் மட்டு மன்றி திருகோணலைக்கே சூழல் சுகாதாரப்பாதிப்பு வரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.


இந்தநிலையில் புதிய அரசு க்கு அருகில் உள்ள நாவலடிச்சந்தியில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெற்றன.?இது அமைந்தால் முழ மூதுார் மட்டு மன்றி திருகோணலைக்கே சூழல் சுகாதாரப்பாதிப்பு வரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.


இந்தநிலையில் புதிய அரசு முறையான திட்டத்துடன் 10 வருடங்கள் 8அடி கொட்டிலில் எணணெற்ற துன்பத்துடன் வாழ்ந்த மக்களுக்கு வழங்களைத்திரட்டி உதவ முன்வரவேண்டும். மட்டுமன்றி இவ்வாறு இடம் பெயர்ந்து மீழக்குடியேற்றப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் மக்கள் மீழாத பல துன்பத்தில் இன்றும் துவண்டு கொண்டுள்ளனர்.அவர்களின் எதிர்காலத்திற்கு புலத்திலும். நிலத்திலும் உள்ளவர்கள் உதவுவது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் மக்களின் நிலையான அரசியல் தீர்வு நிலையான வாழ்வாதாரத்துடனான வாழ்விற்கு ஒன்றுபட்டுஉதவுவது கடமையாகும். அவ்வாறில்லாது அரசியல் என்று சொல்லிக் கொண்டு ஒற்றுமைக்கு ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைக்கும் வேலையைச் செய்யக்கூடாது என்பது பாதிக்கப்பட்டு வாழத்துடிக்கும் மக்களின் எரிச்சலுடனான எதிர்பார்ப்பாகும்.


கடந்த வாரம் இலங்கைவந்த அமேரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன்கரி ”சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்” என தமிழ் மக்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் சுட்டிக்காட்டிச் சென்று்ள்ளனர். தற்சமயம் ”தமிழர் அரசியல்தீர்வு” மட்டுமன்றிஅபிவிருத்தியிலும் தமிழர்களின் அரசியல்பயணம் சமாந்திரமாக கவனம் செலுத்தி வரும் நிலையில் அபிவிருத்தியில் ஆழமான ஆய்வும் திட்டமிடலும் வேண்டாமா? வழங்களை ஒருங்கிணைக்க வேண்டாமா? இவை கேள்வியாகவுள்ளன. தோ்தல் கால அரசியில் தமிழருக்கு பொருத்தமா? இவை பற்றி சம்பந்ப்பட்டோர் கவனம் கொள்ள வேண்டும் என மக்கள் அமைப்புக்கள் கோரிநிற்கின்றன

« PREV
NEXT »

No comments