Latest News

May 11, 2015

யாழ். மண்டைதீவுப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது
by admin - 0

யாழ். மண்டைதீவுப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். 

18 ஏக்கர் செம்மண் தோட்டக்காணியும் 7 ஏக்கர் கடற்கரை காணியும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை கையகப்படுத்தவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காணி உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவித்து, காணிகளை மீட்டுத் தருமாறு வேலணை பிரதேச செயலாளரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இன்னமும் கடற்படையினர் அந்தக் காணிகளை விட்டுச் செல்லவில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காணிகளை மீட்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் பல தரப்பிடமும் கோரியுள்ளனர்.

இதனிடையே இப்பகுதியினில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள பகுதியினில் இதுவரை அகழப்படாத இரு பாரிய கிணறுகள் இருப்பதாகவும் அதில் கடந்த காலங்களினில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பலரது மனித எச்சங்கள் இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.அவற்றினை பேணவே கடற்படை இவ்வாறு நிலைகொண்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நன்றி பதிவு

« PREV
NEXT »

No comments