Latest News

May 12, 2015

இலங்கை அணிக்கு களத்தடுப்பு பயிற்சி அளிக்கும் ஜொன்டி ரோட்ஸ்
by Unknown - 0

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜொன்டி ரோட்சிடம் பயிற்சி பெற இலங்கை அணி எதிர்பார்த்துள்ளது.

இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு களத்தடுப்பு பயிற்சியாளராக இருக்கிறார்.

இந்நிலையில் எதிர்வரும் யூனில் இலங்கை வரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்னர் 10 தினங்களுக்கு ரோட்சின் சேவையை பெற இலங்கை கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் கோரிக்கையை ஜொன்டி ரோட்ஸ் ஏற்றுள்ளதாக தெரிய வருகிறது.

இது குறித்து நாம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவை எடுக்க எதிர்பார்த்திருக்கிறோம் என்று இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இது குறித்த திட்டம் மற்றும் எவ்வாறு பயிற்சி வழங்குவது என்பது பற்றி நாம் அவரிடம் கோரிக்கை விடுத்தோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் களத்தடுப்பின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி ரோட்ஸ், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

« PREV
NEXT »

No comments