இலங்கையின் திறைசேரியிடம் போதியளவு கையிருப்பு பணம் உள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனைக்கொண்டு புதிய அரசாங்கம் செயற்படமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உரையாற்றுகையில் அரசாங்கத்திடம் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட நிதியில்லை என்று குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் சந்திரிக்காவின் கருத்தில் உண்மையில்லை என்று ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
இந்தநிலையில் முன்னைய அரசாங்கம் மேற்கொண்டு துஸ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாக பாரிய திட்டங்களுக்கான நிதிக்கொடுப்பனவுகளில் பிரச்சினை உள்ளதாக அமைச்சர் கூறினார்.
No comments
Post a Comment