30 வருட போராட்ட காலத்தின் பின்னரும் எமது இனம் திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்பட்டு வருகின்றது இதனை மாணவர் சமூகம் வன்மையாக கண்டிப்பதாக யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.ஜெசிந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கயில்,
எமது இனத்திற்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அணைத்து சட்டவிரோத செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
புங்குடுதீவு மாணவி கொடுமையாக துன்புறுத்தப்பட்டு வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ளார்கள். இப்படியான நிகழ்வுகள் எமது சமூகத்தின் மத்தியில் இனிவரும் காலத்தில் இடம்பெற கூடாது
உரிய தரப்புக்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அதியுச்ச தண்டனைகளை குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும் இனிவரும் காலத்தில் இவ்வாறான குற்றவாளிகள் எமது சமூகத்தில் தோன்ற கூடாது என மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment