Latest News

May 28, 2015

இலங்கை மனித உரிமை தொடர்பான நிலைப்பாட்டை மீள் உறுதிப்படுத்திய கனடிய அரசின் மத்திய அமைச்சர்கள்!
by Unknown - 0

கனடா-வான் வுட்பிறிச் நகரத்தை சார்ந்த தமிழ் மக்கள் கனடிய மத்திய அமைச்சர்கள் மதிப்பிற்குரியவர்களான Julian Fantino (Associate Minister of National Defense) மற்றும் Candice Bergen (Minister of State, Social Development) அவர்களுடன் முக்கிய அரசியல் சந்திப்பொன்றை 23 -05-2015 அன்று மேற்கொண்டார்கள்.

அகவணக்கத்துடனும் தேசிய-தமிழ் கீதங்களுடனும் ஆரம்பித்த இச்சந்திப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசின் மனித உரிமைகள் தொடர்பான கனடிய அரசின் நிலைப்பாட்டையும் கடந்தகால நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய விரிவான கருத்துக்களை வழங்கினார்கள். அத்துடன் இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெறவேண்டுமெனவும் அதற்கான அரசியல் அழுத்தத்தை கனேடிய அரசு கொடுக்கவேண்டுமெனவும் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை அது தொடர்பாக சம்பத்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்தார்கள் .

இறுதியாக கேள்வி பதில் நேரத்தில் பல்வேறுவகையான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. வான் வுட்பிறிச் சார்ந்த போக்கு வரத்து, வேலை வாய்ப்பு மற்றும வைத்திய சாலை பற்றிய கேள்விகளும் வினவப்பட்டது குறிப்பிடத்தக்கது. கனடாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய இரு அமைச்சர்களை சந்தித்து தாயகப் பிரச்சனைபற்றி கலந்துரையாடியமை பங்குபற்றியவர்களிற்கு மனமகிழ்வை கொடுத்ததை அவதானிக்க முடிந்ததாக இவ் நிகழ்கவை ஒருங்கமைத்த வான் தமிழ் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.






« PREV
NEXT »

No comments