இலங்கை கிரிக்கட் அணியை அழைத்து பாகிஸ்தானில் கிரிக்கட் தொடர் ஒன்றை நடத்த அந்த நாட்டின் கிரிக்கட் சபை முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தகவல்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.
இதனை அடுத்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை.
தற்போது சிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சென்று சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கட் அணியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் பாகிஸ்தானுக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments
Post a Comment