Latest News

May 28, 2015

அனைத்து பக்கமும் நெருக்கடியில் மாட்டிய பிரபல தொலைக்காட்சி!
by Unknown - 0

நம்பர் 1 என்ற இடத்திற்கு அப்படி என்ன ஒரு கர்வம் என்று தெரியவில்லை, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று இப்படித்தான் முன்னணி நடிகர்கள் அனைவரையும் தன் கையில் போட்டுக்கொண்டு மிகவும் ஆட்டம் போட்டுள்ளது.

இதை அறிந்த தயாரிப்பாளர் சங்கம், ’அது என்ன பெரிய நடிகர்களின் படத்தை மட்டும் வாங்குவது?.. நம் ஆட்களை வைத்து அவர்கள் பணம் சம்பாதித்து விட்டு, பின் நம்மையே ஒதுக்குவதில் எந்த விதத்தில் நியாயம்’ என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.தற்போது இதன் முதற்கட்ட வேலையாக சின்னத்திரையில் வேலை பார்க்கும் பெப்சி(fefsi) தொழிலாளர்களை அங்கிருந்து வர சொல்லி விட்டார்களாம். அவர்களும் வெளியேற, அந்த தொலைக்காட்சியில் 3, 4 நிகழ்ச்சிகள் ரத்து ஆகி விட்டதாம்.

மேலும், இன்று மாலை தயாரிப்பாளர் சங்க செயற்குழுவின் அவசரக்கூட்டம் நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments