20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்தவொரு புதிய தேர்தல் முறைமையிலும் தேர்தலை நடத்த தமது திணைக்களம் தயார் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயகலத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
வில்பத்து உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த வாக்காளர்கள் தொடர்பில் பாரிய பிரச்சினை நிலவுவதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, இடம் பெயர்ந்த மக்களுக்காக விஷேட சட்டமூலத்தின் கீழ் வழங்கப்பட்டிருந்த வரப்பிரசாதம் நீடிக்கப்படுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment