Latest News

May 27, 2015

நாடாளுமன்ற விசேட அமர்வு எதிர்வரும் ஜுன் 3
by Unknown - 0


அரசியலமைப்பு சபை உருவாக்கத்தின் நிமித்தம் நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதி இடம்பெறவுள்ளது. 

பிரதி சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பு சபைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பொது உறுப்பினர்களின் பெயர்களை இறுதி செய்வதற்காக இந்த அமர்வு நடைபெறவுள்ளது. 

10 பேர் கொண்ட அரசிலமைப்பு குழுவில் ஏழு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.

இதன் பிரதமர் ரணில்விக்ரமசிங்க, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனேவிரத்ன மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் பொது பிரதிநிதிகளாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ராதிகாகுமாரசுவாமி, ஏ.டபிள்யு.இசட்.சலாம் மற்றும் ஏ.ரீ. ஆரியரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த பொதுப் பிரதிநிதிகளை உறுதி செய்வதற்காக இந்த விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.
« PREV
NEXT »

No comments