Latest News

May 17, 2015

புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தல்
by admin - 0

 பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்
புங்­கு­டு­தீவில் உயர்­தர வகுப்பு மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் படு­கொலை குறித்து உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் நீதி­மன்­றத்தின் முன் நிறுத்­தப்­பட்டு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்று மகளிர் விவ­கார பிர­தி­ய­மைச்­சரும் ஐ.தே. க.வின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பி­ன­ரு­மான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.புங்­கு­டு­தீவில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு மாணவி படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்தைக் கண்­டித்து விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே பிர­தி­ய­மைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது;

கடந்த ஆட்சிக் காலத்தில் யாழ். குடா­நாட்டில் பல பாலியல் வல்­லு­றவுச் சம்­ப­வங்­களும் பெண்கள் மீதான வன்­மு­றை­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. காரை­ந­கரில் கடந்­த­சில மாதங்­க­ளுக்கு முன்னர் 9 வயது மற்றும் 11 வயது பாட­சாலை மாண­விகள் மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் மேற்­கொள்ளப்­பட்­டி­ருந்­தது. 

இந்தச் சம்­பவம் தொடர் பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­ட­போ­திலும் குற்­ற­வா­ளிகள் இன்­னமும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை.

இதேபோல் பல்­வேறு சம்­ப­வங்கள் குடா­நாட்டில் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. புதிய அர­சாங்கம் பத­வி­யேற்ற பின்னர் இவ்­வா­றான பெண்கள் மீதான வன்­முறைச் சம்­ப­வங்கள் மற்றும் பாலியல் வல்­லு­றவுச் சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. தற்­போது புங்­கு­டு­தீவுப் பகு­தியில் பாட­சாலை மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
இந்த கொடூர சம்­ப­வத்தில் ஈடு­பட்ட 3 பேர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த படு­பா­தக செயலை யார் மேற்­கொண்­டி­ருந்­தாலும் அவர்கள் நீதி­மன்­றத்­துக்கு முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதற்­கான நட­வ­டிக்­கை­களை பொலிஸார் ஆரம்­பித்­துள்­ளமை பாராட்­டத்­தக்­கது.

சம்­ப­வத்தில் படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வியின் குடும்­பத்­தி­ன­ரது ஆழ்ந்த கவ­லையில் நானும் பங்­கேற்­றுக்­கொள்­கின்றேன். எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான துர்ப்­பாக்­கிய சம்­ப­வங்கள் இடம்­பெ­றாமல் தடுப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டு­மென்று பொலிஸ்மா அதி­பரை நான் கேட்­டுக்­கொள்­கிறேன். எமது மக்கள் கடந்த 3 தசாப்­த­கா­ல­மாக யுத்­தத்­தினால் பெரும் இழப்­புக்­களை சந்­தித்­துள்­ளனர். இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்தியில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள், படுகொலைகள் இடம்பெறுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

புங்குடுதீவு மாணவி படுகொலை விடயத்தில் நீதி உடனடியாகவே நிலை நாட்டப்பட வேண்டும். குடாநாட்டில் இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாதிருப்பதை பொலிஸார் உறுதிசெய்ய வேண்டும்
« PREV
NEXT »

No comments