Latest News

May 17, 2015

தமிழர்தாயகத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் எதிர்க்கட்சி - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
by admin - 0

தமிழர்தாயகத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் எதிர்க்கட்சி - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!


தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடாத்த இருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்திருக்கின்றது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்திற்கு 16ஆம் திகதி காலை 8.30மணிக்குச் வந்த முல்லைத்தீவு பொலிசார் நேரடியாகவே விசாரணைகளை நடாத்தியிருந்தனர்.

முள்ளிவாய்க்காலில் நாம் நினைவுச்சுடரேற்தி, பிரார்த்தனைசெய்து அஞ்சலி உரைகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தோம். இந்தநிகழ்விலே எந்தவிதமான வன்செயல்களையோ, எந்தவொரு தரப்புக்குமான அச்சுறுத்தல்களையோ நாங்கள் மேற்கொள்ளப்போவதில்லை எனத்தெளிவாகக் கூறினோம்.

நான் இவ்வாறு கூறினாலும் பொலிசார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முள்ளி வாய்க்காலில் நினைவு நிகழ்வை நிகழ்தும் அதே நாளில் இன்னோர் தரப்பும் ஒரு நிகழ்வை நடாத்தி இருப்பதாக புலனாய்வுப்பிரிவினர் தங்களுக்குத் தகவல் தந்திருக்கின்றனர் இதனால் அங்கு மோதல் ஏற்படும் என்ற காரணத்திற்காக முல்லைத் தீவு நீதிமன்றத்தில் நாம் தடை உத்தரவிணைப் பெற்றிருக்கின்றோம் என்றனர்.

மற்ற அமைப்பு நிகழ்வொன்றை செய்வதாகக் கூறியிருந்தார்கள் அந்த நிகழ்வும் தடைசெய்யப்பட்டிருக்கின்றதா? என்று நான் கேட்ட கேள்விக்கு பொலீசாரிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. அதற்குப் பதில்தர அவர்கள் விரும்பவும் இல்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்வினைநடாத்த தடைவிதித்திருப்பது எம்முடைய அமைப்புக்கு மட்டும்தான். வேறெந்த அமைப்புக்கும் தடைவிதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர் நிலமைகள் எல்லாம் மாறியிருக்கின்றது என இன்று எமக்கு சொல்லப்படுகின்றது. நேற்று நடந்த விவாத நிகழ்விலும் சொல்லப்பட்டது. ஜனவரி 8ஆம் திகதிக்குப்பின்னர் தமிழருக்கு எந்தவொரு வெளியும் இல்லாத நிலையில் யன்னல் திறக்கப்பட்டு மூச்செடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பாதையில் ஜனநாயகம் ஓடுகின்றது என்றெல்லாம் சொல்லப்பட்டது. 

ஆனால் இறந்தவர்களுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்துவதற்கும் இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்பட்ட ஒரே அமைப்பு நாங்கள் தான். நாங்கள் யார்? தமிழர்தாயகத்தில் இன்று எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரேயொரு தரப்பு. தமிழ்க்கட்சிகள் என்று பார்த்தாலும் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரேயொரு தரப்பு நாங்கள்தான். மற்றவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பங்காளிகள். அமைச்சுப்பதவிகள் எடுக்காமல் ஒரு சிலர் இருக்கின்றனர். ஆனால் அமைச்சுப்பதவிக்கு மேலான தேசிய நிறைவேற்று சபையில் அவர்கள் பங்கெடுக்கின்றனர். இந்த இடத்தில் நாங்கள் மட்டும்தான் அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்காமல் சுதந்திரமாகச்செயற்படுகின்ற ஒரே அமைப்பு அதுவும் தமிழத்தேசியவாதத்தை மையப்படுத்தி செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அமைப்பு. இந்த அமைப்பினுடைய அமைதியான நிகழ்விற்கு தடையாகக்கோரி இருப்பவர்கள் யார்? பொலீசார், பொலீஸ்துறை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. எங்களைப் பொறுத்தவரை ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

முள்ளிவாய்க்காலில் இந்த நிகழ்வு நடைபெறாவிட்டாலும் வேறோர் இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் அது தொடர்பான மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவோம்.

- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(யாழ்ப்பாண ஊடக அமையத்தில்..)
« PREV
NEXT »

No comments