வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலொன்னெ வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஊடக சந்திப்பிற்கு அனுப்பப்பட்ட ஊடக அழைப்பில் பல நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
நேரடி ஒளிபரப்பு செய்யும் நோக்கில் கமரா கொண்டு வரத் தடை, தொலைக்காட்சிகள் மற்றும் குறுந்தகவல் செய்தி வௌியிடும் இணையத்தள செய்தியாளர்கள் கலந்து கொள்ள முடியும் ஆனால் கமரா உள்ளவர்கள் கலந்து கொள்ள முடியாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் ஊடகவியலாளர்கள் விளக்கம் கோரியபோது அது தொடர்பில் ஆராய்வதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் என்பதால் ஊடகவியலாளர்கள் மஹேசினியிடம் தொலைபேசி இலக்கத்தை கோரியபோது, 'எனக்கு வௌிவிவகார அமைச்சில் வேறு வேலைகள் உள்ளன. அதனால் ஊடகவியலாளர்கள் கேள்விக்கு அடிக்கடி பதில் அளிக்க முடியாது' என்று கூறி தொடர்பு இலக்கம் வழங்க மறுத்த அவர், ஊடக சந்திப்பில் ஆங்கில மொழியில் மாத்திரம் உரையாற்றினார்.
இலங்கையில் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்படுகின்ற போதும் அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளவர்கள் ஊடகங்களுக்கு தகவல் அறியும் உரிமைக்கு மிகுந்த கௌரவம் அளிப்பதாக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments
Post a Comment