Latest News

June 01, 2015

நல்லாட்சியில் பள்ளிவாசல் தாக்குதல் ; சிந்திக்க வேண்டிய ஒரு விடயம்!
by Unknown - 0

கடந்த ஆட்சிக் காலத்தில் பல பள்ளிவாசல்கள் தாக்கபட்டடன. ஆனால் நல்லாட்சியில் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் பல
ரீதியாக சிந்திக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தர்.

நேற்று நள்ளிரவு தாக்கப்பட் பொரளை பள்ளிவாசலை பார்வையிட சென்ற மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான இனவாத குழுக்கள் மீண்டும் இந்த நல்லாட்சிக்கு எதிராக பல பிரச்சினைகளை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளார்களா? அல்லது இந்த நல்லாட்சியில் மீண்டும் இனவாதிகள் தலைதூக்கி முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சினை உருவாக்க முயற்சி செய்தார்களா என்ற கேள்விகள் எழுகின்றன.

மஹிந்த ராஜபக்ஷவின் உரைகளை கேட்கும் போது, அவர்கள் இனவாதத்தை தூண்டி, மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பது தெரிகிறது. எனவே அவரின் இனவாத பேச்சுக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் பல தொடர்புகள் இருக்கின்றனவா எனவும் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்
« PREV
NEXT »

No comments