இந்திய ரயில்வே பாதை அமைப்பொன்றிற்கு சொந்தமான கனரக வாகனமொன்றை பயன்படுத்தி இக்கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.கஜேந்திரனின் நடமாட்டங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டு குறித்த கனரக வாகனத்தை செலுத்தி வந்த சாரதியின் கைத்தொலைபேசிக்கு வழங்கப்பட்ட கடைசி உத்தரவு மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.எனினும் கொழும்பு உயர்மட்ட பணிப்பினையடுத்து விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளதுடன் சாரதியும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் யாழப்பாணத்திலுள்ள தூதரக அதிகாரி மூர்த்தி யாழ்.போதனாவைத்தியசாலையினில் கஜேந்திரனை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.அத்துடன் தேர்தல் அண்மிக்கும் நேரம் நடந்த விபத்திற்கு கவலை வெளியிட்டுள்ளார்.
எனினும் யாழப்பாணத்திலுள்ள தூதரக அதிகாரி மூர்த்தி யாழ்.போதனாவைத்தியசாலையினில் கஜேந்திரனை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.அத்துடன் தேர்தல் அண்மிக்கும் நேரம் நடந்த விபத்திற்கு கவலை வெளியிட்டுள்ளார்.
முதலில் வாகனத்தின் முன்னிணைப்பே தன்னை தாக்கியதாக கூறும் கஜேந்திரன் சாரதி இயந்திரத்தை அணைப்பதற்கான நேரமிருந்ததாக கூறுகின்றார்.
தூக்கி வீதியோரம் அவர் எறியப்பட்டபோதும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கனரக வாகனம் ஏறி அதை முற்றாக தரையுடன் சிதைத்துள்ளது.அவ்வாறாயின் கஜேந்திரன் நிலை அதனுள் அகப்பட்டிருந்தால் என்னவாகுமென கேள்வி எழுப்பப்படுகின்றது.
முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினையும் தமது கைகளுள் கொண்டு வர இந்திய உளவு கட்டமைப்பு பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.அது வெற்றி பெற்றிருக்காத நிலையினில் ஆட்களை களைய முற்பட்டுள்ளதாக சந்தேக்கிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக முன்னணியின் நிலைப்பாடு தொடர்பினில் இளம் சமூகத்திடையேயும் புத்திஜீவிகளிடையேயும் வரவேற்பினை பெற்றிருக்கின்றது.அத்துடன் கிழக்கிலும் வேகமாக கட்சி வளர்ச்சி கண்டுள்ளது.திருமலையினில் கூட்டமைப்பின் எதிர்காலத்தையும் அது கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முன்னணிக்கு தடை விதிக்கப்பட்ட போதும் கூட்டமைப்பு தொடர்பினில் கண்டு கொள்ளப்படாததுடன் தடை விதிக்கப்படாது இந்திய தூதுவராலயம் நடவடிக்கை எடுத்திருந்ததாக வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இத்தகைய பின்னணியிலேயே முன்னணியின் முன்னணி செயற்பாட்டளார் கஜேந்திரனை கொலை செய்ய முயற்சிகள் நடந்து தோல்வியினில் அது முடிந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

இது ஒரு கொலை முயட்சி என விவசாயி செய்தி வெளியிட்டு இருந்தமை குறிப்பிடதக்கது
No comments
Post a Comment