Latest News

May 11, 2015

தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா விடுதலை - தமிழீழ மக்கள் மகிழ்ச்சி சிங்களம்களக்கம்
by admin - 0

தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தெரிவித்த தமிழக முன்னாள் முதல்வர் அவர்களின் விடுதலை தமிழ் மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது அவரின் நடவடிக்கை அரசியலாக இருந்தாலும் தமிழீழ தனியரசுக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் என்பதால் அவரின் மீள வருகை மகிழ்ச்சி தரக்கூடியது என தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள் அதேநேரம் சிங்கள ஆட்சியாளர்கள் மத்தியில் களக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மற்று கருத்தில்லை அதன் வெளிப்பாடே ஶ்ரீலங்கா செய்தி ஊடகங்களின் பரபரப்பு .


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்புதீர்ப்பு-நாளை முதல்வராகிறார்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்காக இலங்கை ஊடகங்கள் இலவு காத்த கிளியாக காத்திருந்தன. இலங்கையில் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தமது பதவி காலத்தில் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டவர் ஜெயலலிதா. ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. 

கடந்த 4 ஆண்டுகால அண்ணா தி.மு.க. ஆட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த ஒரு விளையாட்டு வீரரும் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு வீரரும் இலைங்கைக்கு விளையாட செல்லவும் அனுமதிக்கப்பட்டது இல்லை. இதனால் இலங்கை அரசும் இலங்கை ஊடகங்களும் ஜெயலலிதா தொடர்பான வழக்கில் அதீத ஆர்வம் காட்டியே வந்தன. இன்று ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பும் பின்பும் இலங்கையின் தமிழ், ஆங்கில, சிங்கள ஊடகங்கள் வெளியிட்டிருந்த ஜெயலலிதா வழக்கு குறித்த செய்தியின் தலைப்புகள்: 


ஆங்கிலம்: டெய்லி மிர்ரர் (dailymirror): Jayalalithaa acquitted of corruption charges அததீரனா (Adaderana) : Jayalalitha aquitted; to be CM again? லங்காபுவத் (lankapuvanth): Jayalalithaa acquitted in disproportionate assets case டெய்லி நியூஸ் (daily news): s: Jayalalithaa Acquitted of Corruption Charges by Karnataka High Court: 10 Developments 

சிங்களம்: தினமின: ජයලලිතාගේ නිදහසත් සමඟ තමිල්නාඩුව පුරා සැනකෙළි லக்பிம: නැවත මහඇමැතිකම ලැබෙන හැඩ லங்கதீப: ජයලලිතා නිදහස් : චෙන්නායි පුරා උත්සව 

தமிழ்: தினகரன்: ஜெயலலிதாவின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பரபரப்பான தீர்ப்பு இன்று வீரகேசரி: ஜெயலலிதா விடுதலை


இன்றும் நாளைய முதல்வர் அம்மா ஜெயலலிதா தமிழீழ ஆதரவுடன் இருப்பார் இருக்கவேண்டும் அதுவே தமிழர்களுக்கு அவர் செய்யும் கடமையாகும்

« PREV
NEXT »

No comments