புதுடெல்லி: வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டதை அறிந்த சுப்ரமணியன் சுவாமி கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் மனுதாரர் சுப்ரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment