Latest News

May 17, 2015

நியா­ய­மான காரணம் கூறப்­ப­டா­விடின் அரசிலிருந்து அடுத்தவாரம் விலகுவோம் அர­சாங்­கத்­துக்கு சுதந்­திரக் கட்சி எச்­ச­ரிக்கை
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com
உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­களை ஜன­நா­யக விரோ­த­மான முறையில் விசேட ஆணை­யா­ளர்­களின் கீழ் கொண்­டு­வந்­துள்­ளமை நல்­லாட்­சிக்கு ஏற்­பு­டை­ய­தாக இல்லை. இந்த விட­யத்தில் நாங்கள் அதி­ருப்­தி­யுடன் இருக்­கின்றோம். இது தொடர்பில் ஜனா­தி­பதி விளக்­க­ம­ளிக்­க­வேண்டும். நியா­ய­மான கார­ணங்கள் முன்­வைக்­கப்­ப­டா­விடின் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதா இல்­லையா? என்­ப­தனை அடுத்த வார­ம­ளவில் சுதந்­திரக் கட்சி தீர்­மா­னிக்கும் என்று கட்­சியின் ஊடக பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

நல்­லாட்­சியில் ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மான செயற்­பா­டுகள் இடம்­பெ­றக்­கூ­டாது. உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­க­ளுக்கு உட­ன­டி­யாக தேர்­தலை நடத்­தலாம்.
அல்­லது அவற்றின் ஆட்­சிக்­கா­லத்தை நீடித்­தி­ருக்­கலாம். அத­னை­வி­டுத்து ஆணை­யா­ளரின் கீழ் கொண்­டு­வ­ரு­வது மக்­களின் வாக்­கு­ரி­மையை கேள்­விக்­குட்­ப­டுத்தும் செயற்­பா­டாகும். இதனை நல்­லாட்­சியில் நாங்கள் எதிர்­பார்க்­க­வில்லை. அதனால் இந்த அர­சா்­ங­கத்தில் அமைச்சுப் பத­வி­களை தொடர்ந்தும் வகிப்­பதா? என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­காலம் முடிந்­ததும் தேர்­தலை நடத்­தாமல் அதனை பாரா­ளு­மன்ற செய­லாளர் நாய­கத்தின் கீழ் கொண்­டு­வ­ரு­வதைப் போன்றே அர­சாங்­கத்தின் செயற்­பாடு காணப்­ப­டு­கின்­றது. இதில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆதிக்­கத்­துக்கு ஜனா­தி­பதி உட்­பட்­டுள்­ளமை தெரி­கின்­றது. இது தொடர்பில் ஜனா­தி­பதி விளக்கம் அளிக்­க­வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் விரை­வாக பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் தேர்தல் முறைமை மாற்­றப்­ப­ட­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் சுதந்­திரக் கட்­சியின் செயற்­பா­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

நாட்டில் காணப்­படும் 335 உள்­ளு­ராட்சி மன்­றங்­களுள், உள்­ளு­ராட்சி நிறு­வ­னங்கள் 234 இன் பதவிக் காலம் நேற்­றுடன் முடி­வ­டைந்­தது. மேலும் 65 உள்­ளு­ராட்சி நிறு­வ­னங்­களின் பதவிக் காலம் 2015-07-31 ஆம் திகதி முடி­வ­டை­கின்­றது. 21 உள்­ளு­ராட்சி நிறு­வ­னங்­களின் பதவிக் காலம் 2015-10-16 ஆம் திகதி முடி­வ­டை­கின்­றது. 2 உள்­ளு­ராட்சி நிறு­வ­னங்­களின் பதவிக் காலம் 2015-10-31 ஆம் திகதி முடி­வ­டை­கின்­றது. இந்­நி­லையில் பத­விக்­காலம் முடி­வ­டையும் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கலைத்­து­விட்டு ஆணை­யா­ளரின் கீழ் கொண்­டு­வர அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­மையை சுதந்­திரக் கட்சி எதிர்த்­துள்­ளது.

அமைச்சர் டிலான் பெரெரா இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் நல்­லாட்சி அர­சாங்கம் என்­பதன் கார­ணத்­தி­னா­லேயே சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுவின் தீர்­மா­னத்­துக்கு அமைய நாங்கள் அமைச்­ச­ர­வையில் இணைந்­து­கொண்டோம். தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை பெற்றோம். ஆனால் தற்­போது நல்­லாட்­சிக்கு தொடர்­பில்­லாத ஜன­நா­யக விரோ­த­மான செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வதை உணர்­கின்றோம்.
அதா­வது நாட்டில் காணப்­ப­டு­கின்ற உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களின் பத­விக்­காலம் முடி­வ­டைந்தால் அவற்­றுக்கு தேர்­தலை நடத்­த­வேண்டும். உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு தமது பிர­தி­நி­தி­களை அனுப்­பு­வது மக்­களின் உரி­மை­யாகும். ஆனால் அர­சாங்கம் மக்­களின் இந்த ஜன­நா­யக உரி­மைக்கு மதிப்­ப­ளிக்­காமல் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை விசேட ஆணை­யா­ளரின் கீழ் கொண்­டு­வ­ரு­வது சிறந்த விட­ய­மாக தெரி­ய­வில்லை.

உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை ஜன­நா­யக விரோ­த­மான முறையில் விசேட ஆணை­யா­ளர்­களின் கீழ் கொண்­டு­வந்­துள்­ளமை நல்­லாட்­சிக்கு ஏற்­பு­டை­ய­தாக இல்லை. இது தொடர்பில் ஜனா­தி­பதி விளக்­க­ம­ளிக்­க­வேண்டும். இல்­லா­விடின் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதா இல்­லையா? என்­ப­தனை அடுத்த வார­ம­ளவில் சுதந்­திரக் கட்சி தீர்­மா­னிக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும்.

விசே­ட­மாக இவ்­வா­றான அர­சாங்­கத்தில் தொடர்ந்து அமைச்­ச­ராக இருப்­பதா? இல்­லையா என்­ப­தனை தீர்­மா­னிக்­க­வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம். உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு உட­ன­டி­யாக தேர்­தலை நடத்­தலாம். அல்­லது அவற்றின் ஆட்­சிக்­கா­லத்தை நீடித்­தி­ருக்­கலாம். அத­னை­வி­டுத்து ஆணை­யா­ளரின் கீழ் கொண்­டு­வ­ரு­வது மக்­களின் வாக்­கு­ரி­மையை கேள்­விக்­குட்­ப­டுத்தும் செயற்­பா­டாகும். இதனை நல்­லாட்­சியில் நாங்கள் எதிர்­பார்க்­க­வில்லை. அத­னால்தான் இந்த அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை தொடர்ந்தும் வகிப்­பதா? என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இந்த விட­யத்தில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்து நாங்கள் திருப்­தி­ய­டை­வில்லை. அதா­வது பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­காலம் முடிந்­ததும் தேர்­தலை நடத்­தாமல் அதனை பாரா­ளு­மன்ற செய­லாளர் நாய­கத்தின் கீழ் கொண்­டு­வ­ரு­வதைப் போன்றே அர­சாங்­கத்தின் செயற்­பாடு காணப்­ப­டு­கின்­றது. இதில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆதிக்­கத்­துக்கு ஜனா­தி­பதி உட்பட்டுள்ளமை தெரிகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் அளிக்கவேண்டும். நியாயமான காரணங்கள் முன்வைக்கப்படாவிடின் நாம் அரசாங்கத்தில் இருப்பதா? இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

உள்ளூராட்சிமன்ற விடயத்தில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கம் இருக்கின்றமை தெளிவாகின்றது. இவ்வாறு மக்களின் ஜனநாயகத்துடன் யாரும் விளையாட முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. அந்தவகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய தீர்மானம் ஒன்றை விரைவில் எடுக்கும் என்றார்.
« PREV
NEXT »

No comments