Latest News

May 18, 2015

லண்டனில் இன்று(18.05.2015) மாலை மே 18 நிகழ்வுகள் நடைபயணத்தோடு ஆரம்பம்
by admin - 0

லண்டன் நேரப்படி மாலை 2.00 மணி முதல் நேரலை ஆரம்பமாகும்: அதுவரை காத்திருக்கவும்










இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன. ஆனந்தபுரம் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலுடன் எங்களது போர் வலுவும் மூர்ச்சையற்றுப்போனது. புலிகளின் அபரிமித வளர்ச்சியில் பயந்துபோன சிங்களத்துடன் இந்தியாவும் மேற்குலகமும் கைகோர்த்து பொய் வாக்குறுதிகளை வழங்கி பெறுமதியான எங்கள் போராட்டத்தை அதற்கான காரணத்தை கவனத்தில் எடுக்காது குழிதோண்டி புதைத்துள்ளது என்பதுதான் உண்மை. இதற்காக விலைபோனவர் சிலர் உள்ளார்கள்.

போரில் சரணடந்தவர்களை கொன்று குவித்து, பெண்களை தாம் கைது செய்தவர்கள் முன்னிலையில் கற்பழித்து கொன்றதோடு அதனை தமது தொலைபேசிகளிலும் படம் பிடித்து ரசித்த கொடூரர்கள். இவர்களிடம் எவ்வாறு நீதியையோ அல்லது சகோதரத்தையோ எதிர்பார்க்க முடியும் ? முள்ளிவாய்க்கால் வரையான போரில், ராணுவத்தின் 5 படையணிகள் இடம்பெற்றிருந்தனர். அவர்களின் கொமாண்டர்களாக சவேந்திர சில்வா, கமால் குணவர்த்தன, ஜெகத் டயஸ், பிரசன்ன டி சில்வா மற்றும் நந்தன உடவத்த ஆகியோர் “சரணடந்த மக்களை என்னவேண்டுமென்றாலும் செய்யலாம்“ என்று தமது படையினருக்கு அனுமதி வேறு வழங்கி இருந்தனர். ஜகத் டயஸ் ஒரு படி மேலே போய் `அவர்கள் அரசாங்க சொத்துக்கள்` என்று அடிமை சாசனம் பாடி இருந்தார். இவர்கள் தான் முதல் குற்றவாளிகள்.

1987 மற்றும் 1977 மற்றும் முதல் காலங்களில் தென்னிலைங்கையில் இடம்பெற்ற ஜே.வி.பி யின் கலவரத்தில் கடுமையாக நடந்து கொண்ட மற்றும் கற்பழிப்புகள் மேற்கொண்ட இராணுவத்தினரை காலம் சென்றாலும், அவர்களில் சிலர் ஓய்வு பெற்ற பின்னரும் வீடுகளுக்குச் சென்று போட்டுத்தள்ளியது ஜனதா விமுக்தி பெரமுன என்னும் ஜே.வி.பி.

அப்படியாயின் மானத்தமிழர் என்ன செய்ய போகிறார்கள் ?

இறந்த தமிழ் மக்களுக்கு கூட நினைவு அஞ்சலி செய்யமுடியாது இருக்கிறது தமிழனின் பூர்வீக பிரதேசத்தில். – வேற்று கிரகத்தில் யாரேனும் வாசிகள் இருப்பார்களேயானால், அவர்கள் பண்டைய மொழியாகிய தமிழ் மொழி அல்லது சீன மொழி பேசும் வாய்ப்பிருக்கிறது என விஞ்ஞானம் கூற ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் – இலங்கையில் தமிழனின் நிலையோ அந்தோ பரிதாபம்! முதலில் தமிழர் ஒற்றுமை மிக அவசியம். ஆளுக்கொரு முன்னணியும் அமைப்புக்களையும் உருவாக்குவதையோ அல்லது வைத்திருப்பதையோ விடுத்து, ஒரு அமைப்பாக இருந்து உண்மையான தமிழர் உரிமை நோக்கர்களை ஒருங்கிணைத்தால் என்ன? இதனை புலம் பெயர்ந்தவர்கள் செய்து காட்டலாமே? ஏன் பிரித்தானியாவிலேயே சாத்தியமாக்கலாமே??

எனவே தமிழர்கள் முதலில் ஒன்றினைந்து இன்று(18.05.2015) நடைபெறவுள்ள மே 18 நிகழ்வுகளில் கலந்துகொள்ளுங்கள்.

நடை பயணம் தொடங்கும் இடம்: Rally starts: 2pm, Whitehall Place, Northumberland Avenue, SW1A

Nearest station: Embankment :
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com

live

« PREV
NEXT »

No comments