சீனா, இந்தியா கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் குங்பூ யோகா என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராக இருக்கிறது.
இந்த படத்தில் ஜெக்கி சான் மற்றம் பொலிவுட் நடிகர் அமீர்கான் இருவரும் நடிக்கவுள்ளனர்.
இப்படம் இரு நாட்டு தயாரிப்பாக வெளியிடப்படும் என்று சீன திரைப்பட கட்டுப்பாட்டுத் துறை கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதன் மூலம் வெளிநாட்டு படங்கள் பிரிவின் கீழ் இந்திய திரைப்படங்கள் சீனாவுக்குள் நுழைய முடியும்.
அதேபோல் இந்தியப் படங்களால் சீனாவுக்கும் பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சீன தற்காப்பு கலையான குங்பூ, இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் யோகா ஆகிய இரண்டையும் இணைத்து ‘குங்பூ யோகா’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்படுகிறது.
இதுதவிர சீனா, இந்தியா கூட்டணியில் இன்னும் 2 படங்கள் தயாராக இருக்கின்றனவாம்.
No comments
Post a Comment