முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் கடற்கரையில் சுடரேற்றல், நினைவஞ்சலி மற்றும் மலர் வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்ன.
முல்லைத் தீவினை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோருடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மேரிகமல, வலி.வடக்கு பிரதேசசபை உபதவிசாளர் ச.சஜீவன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நினைவஞ்சலி உரைகள் முடிவுறும் தறுவாயிலேயே அவசர அவசர வருகை தந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பிக்கையி ல் நினைவேந்தல் வாரம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு உள்ளதனை சிவாஜிலிங்கம் எடுத்து கூறியிருந்தார்.
No comments
Post a Comment