Latest News

May 12, 2015

இந்தோனேசியாவில் 154.7 கிமீ ஆழத்தில் 5.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம்: மக்கள் பீதி
by admin - 0

இந்தோனேசியாவில் இன்று மிதமான அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் நிலை குலைந்துள்ள நேபாளத்தில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் உலகின் 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று பிற்பகல் 12.52 மணி அளவில் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. 

சவ்ம்லாகியில் இருந்து 242 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் 154.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் ஆப்டர்ஷாக் எனப்படும் நிலஅதிர்வுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியாவில் 6.6 என்ற அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அதன் பிறகு ஏப்ரல் 15ம் தேதி சவ்ம்லாகி அருகே ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் இடத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments