Latest News

May 12, 2015

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடிக்கு முன்பே நிலநடுக்கத்தால் ஆடிய ராய்ப்பூர்... பீதியில் வீரர்கள்!
by admin - 0

ராய்ப்பூர்: டெல்லி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே இன்று ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று இரவு நடைபெற உள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் ராய்ப்பூரிலுள்ள நிலையில், நிலநடுக்க பாதிப்பை அவர்களும் உணர்ந்துள்ளனர். 

ராய்ப்பூரில் நில நடுக்கத்தை உணர முடிந்தது. நிலநடுக்கத்தின் மைய பகுதியுள்ள மக்களை நான் இப்போது நினைத்து பார்க்கிறேன், என்று இலங்கை முன்னாள் ஆல்ரவுண்டர் ரசல் அர்னால்டு டிவிட் செய்துள்ளார். சண்டீகரில் உட்கார்ந்திருந்தபோது ஆஸி. முன்னாள் வீரர் டேமியன் மார்டின் நில அதிர்வை உணர்ந்ததாக டிவிட் செய்துள்ளார்.


« PREV
NEXT »

No comments