Latest News

May 12, 2015

4 தடவை இடம்பெற்ற நிலநடுக்கம்-நேபாள அவசர இலக்கம் அறிவிப்பு
by admin - 0

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அவசர உதவிக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 12.35 மணியளவில் நேபாளத்தலைநகர் காத்மாண்டுவை மையமாகக் கொண்டு ரிக்டரில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் இந்நிலநடுக்கம் வெவ்வேறு அலகுகளில் உணரப்பட்ட நிலையில் நேபாளத்தில் தொடர்ச்சியாக 4 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


பிற்பகல் 1.09, 1.19 மற்றும் 1.21 மணியளவில் அடுத்தடுத்த நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகின. இந்நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவுகோலில் 5.6, 5.5, 6.3 அலகுகள் ஆக பதிவாகியுள்ளன.இந்நிலையில் நேபாளத்தின் சவுத்தாரா பகுதியில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ச்சியான நிலநடுக்க அதிர்வுகளால் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ள விமான நிலையம் தற்காலிகமா மூடப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து கொல்கத்தாவிலும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சேவை எண்கள்: நேபாள நிலநடுக்க விவரங்கள் அறிவதற்காகவும், உதவிகளுக்காகவும் அவசர சேவை எண்களை வெளியிட்டுள்ளது நேபாளத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம். 


0-9851107021 


« PREV
NEXT »

No comments