Latest News

May 12, 2015

தடுப்பிலிருந்து விடுதலை பெற்று 2ம் நாள் போராளி விபத்தில்? பலி
by admin - 0

இறுதி யுத்தத்தினில் உயிர் தப்பியிருந்த நிலையினில் வவுனியாவினில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையினில் விடுவிக்கப்பட்ட போராளியொருவர் விபத்தினில் உயிரிழந்துள்ளார். 

முன்னாள் விடுதலைப்புலிப் போராளி ஒருவரே விடுதலையான இரண்டாம் நாளே விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சியின் பூநகரியில் நேற்று முன்தினம் (10) நடந்த விபத்தில் வேலரசன் என்றழைக்கப்படும் பீலிக்ஸ் என்ற போராளியே உயிரிழந்துள்ளார்.

பூநகரி வலைப்பாட்டை சேர்ந்த இவர் பூநகரியில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யுத்தத்தின் முடிவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இவர், இறுதியாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கடந்த 8ம் திகதி விடுதலையானார். 
இரண்டுநாட்கள் மட்டுமே உறவினர்களுடன் இருந்த நிலையில் விபத்தில் பலியான துயரம் நடந்துள்ளது.
சிங்களம் தனக்கு வேண்டாதவர்களை விபத்து கோஷ்டி மோதல்கள் மூலம் கொலை செய்பவர்கள் ஆகையால் இந்த விபத்து வேண்டுமென்று திட்டமிட்ட கொலையா? எனபதே இன்றைய கேள்வி 

« PREV
NEXT »

No comments