எகிப்தின் முன்னாள் அதிபர் மொஹமட் மோர்ஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பெருமளவிலான கைதிகள் சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மொஹமட் மோர்ஸி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட முன்னதாக எகிப்தின் மத விவகார அதிகாரிகள் தண்டனை தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள்.
அரச ரகசியங்களை வெளியிட்டதாகவும் முன்னாள் அதிபர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அந்தக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரால் ஆதரிக்கப்பட்ட மொஹமட் மோர்ஸி, 2013-ம் ஆண்டு இராணுவத்தினரால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
அன்றிலிருந்து முன்னாள் அதிபருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராக ஆட்சியாளர்கள் நீதித்துறையை கருவியாக பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டிவருகின்றன.
No comments
Post a Comment