Latest News

May 16, 2015

முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த TNA க்கு அனுமதி மறுப்பு!
by Unknown - 0

முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர். 

உயிரிழந்த மக்களை நினைவு கூர தடையில்லை எனவும் எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை நினைவு கூர அனுமதி இல்லையெனவும் வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுமதி தொடர்பில் தொடர்பு கொண்ட வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு தகவல் வழங்கி உள்ளதாக தெரியவிக்கப்படுகின்ற நிலையில் முல்லைதீவு பொலிஸார் இன்றிரவு வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர்.

எனினும் தான் உத்தியோக பூர்வமாக எந்தவொரு விண்ணப்பத்தையும் நினைவேந்தல் தொடர்பில் செய்திருக்காத நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் முல்லைதீவு நீதிமன்றினால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடிதமொன்றை சமர்ப்பித்திருப்பதாக ரவிகரன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த நீதிமன்றம் தடை

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சில தரப்பினர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கம் எனவும், தடை செய்யப்பட்ட இயக்கமொன்றுக்கு ஆதரவாக அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

வடக்கில் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ள போதிலும் அவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமையவில்லை எனவும், உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளாகும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்படாது எனவும், உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் அமையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments