இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த நாள் (மே 18) இன்றாகும். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது அரச படைகளின் பல்வேறு விதமான தாக்குதல்களில் கொத்துக்கொத்தாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மே மாதத்தின் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் மக்களின் அவலச்சாவு உச்சத்தில் இருந்தது. அத்துடன் இறுதிப் போர் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், மே 12 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக உலகத் தமிழர்கள் பிரகடனப்படுத்தி அதனை அனுஷ்டித்து வருகின்றனர். இறுதி நாளான மே 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளையும் பெருமெடுப்பில் நடத்தி வருகின்றனர். அதற்கமைய இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று தரணியெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. பாதுகாப்பு வளையம் என்ற போர்வையில் வளையங்களை மக்களை அங்கே வர வைத்து திட்டமிட்டு சிங்கள இனவெறியர் நடத்திய இனப்படுகொலை உலக நாடுகளின் துணையுடன் இடம்பெற்றது மறக்கமுடியாமன்னிக்க முடியாத ஒரு பெரும் இனப்படுகொலை இதை தமிழீழ மக்கள் உலகெங்கும் இனப்படுகொலை நாள் என நினைவு கூறி வருகிறார்கள்
லண்டனில் மிகப்பெரும் எழுச்சியுடன் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உலகத்தமிழர்கள் தமது வணக்கத்தை செலுத்தினர்
பிரித்தானிய தமிழர் பேரவையின் , ஏற்பாட்டில் லண்டனில் முள்ளிவாய்க்கால் தினம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளார்கள். லண்டன் மத்திய நகரமே ஸ்தம்பிக்கும் அளவு மக்கள் அங்கே கூடினார்கள்
எம்பாக்மென் தொடரூந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பித்த மக்கள் , பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கும் முன்னால் அஞ்சலிக்கூட்டமும், ஆர்பாட்டமும் நடைபெற்றது.
இதில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட எங்கள் உறவுகளின் மனச்சாட்சியாக அவர்களின் நேரடி சாட்சியாக அங்கே கடமையாற்றிய DR.வரதராஜன்,தமிழீழ மருத்துவபிரிவு விசேட பயிற்சி பெற்ற மருத்துவ போராளிகளான வாமன் மற்றும் உயட்சி அவர்களும் கலந்துகொண்டார்கள்.
சிறப்பு அம்சமாக ஐக்கிய இராட்சிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து தங்கள் உரைகளை வழங்கினார்கள்
இன் நிகழ்வின் ஒரு பகுதியாக சிறிலங்காவைக் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்துலட்சம் கையெழுத்தினை திரட்டும் பணியில் நாடு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மேற்கொண்டிருந்தனர்.
இன் நிகழ்வின் ஒரு பகுதியாக சிறிலங்காவைக் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்துலட்சம் கையெழுத்தினை திரட்டும் பணியில் நாடு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மேற்கொண்டிருந்தனர்.
No comments
Post a Comment