Latest News

May 19, 2015

மக்களின் எழிச்சியுடன் வடமராட்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
by admin - 0

மக்களின் எழிச்சியுடன் வடமராட்சியில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மக்கள் முழுமையாகப்பங்கெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணியினில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.இன்று முள்ளிவாய்க்காலில் நடாத்த இருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத் தீவு நீதவான் நீதி மன்றம் தடைவிதித்திருந்த நிலையினில் நிகழ்வு வடமராட்சி கிழக்கின் மருதங்கேணிக்கு மாற்றப்பட்டிருந்தது.


முள்ளிவாய்க்காலில் இன அழிப்பிற்குள்ளானவர்களிற்கான நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் மருதங்கேணியினில் ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருந்த வேளை  அங்கு சென்றிருந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அங்கு பிரசன்னமாகியிருந்த ஏற்பாட்டாளர்களது விபரங்களை பெற்று வெளியேறியுள்ளனர்.

நினைவுச் சுடரேற்றல்,மற்றும் பிராத்தனைகளை தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
வடக்கினில் மக்கள் திரண்டு பங்கெடுத்த ஒரு நிகழ்வாக மருதங்கேணி நிகழ்வு அவதானிப்பிற்குள்ளாகியுள்ளது.குறிப்பாக முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த நினைவேந்தலில் பொதுமக்கள் எவரும் கலந்து கொண்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.






« PREV
NEXT »

No comments