மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முதல் குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருக்கும் இடம் தெரியாது என்று லோக்சபாவில் உள்துறை இணை அமைச்சர் தெரிவித்திருப்பது உளவுத்துறை வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் ஹரிபாய், தாவூத் இப்ராஹிம் பதுங்கி இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது; இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்திலேயே இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.
அப்படியானால் 'தாவூத் இப்ராஹிம் எங்கே? உயிரோடுதான் இருக்கிறாரா? அல்லது தனது இருப்பிடத்தை கராச்சி, லாகூர் போன்ற இடங்களில் இருந்து ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைக்கு மாற்றிவிட்டாரா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
No comments
Post a Comment