யாழ்.மாவட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாக்க முற்படும் போது தாம் இராணுவம், பொலிஸாரால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக மனித உரிமைகள் பாதுகாவலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மனித உரிமைகளை பாதுகாக்கும் போது பல தடைகள் விதிக்கப்படுவதாகவும் மறைமுகமான தாக்குதல்கள் தம்மீது திணிக்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டியை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட மனித உரிமைகள் பாதுகாவலர்களே மேற்படி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
No comments
Post a Comment