அவர்கள் உடலில் எந்த ஒரு காயங்களும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். நேற்று முன் தினம் முதல் அவர்கள் வீட்டில் எதுவித நடமாட்டமும் தென்படவில்லை என்றும் பிள்ளைகள் பள்ளிக்கூடம் வரவில்லை என்றும் பொலிசாருக்கு முறைப்பாடு சென்றுள்ளது. பொலிசார் சென்று அவர்கள் வீட்டை தட்டிப்பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அதன் பின்னர் நேற்றைய தினம்(13) மீண்டும் சென்று தட்டிப்பார்த்த போது எவரும் கதவை திறக்கவில்லை. இன் நிலையில் தான் பொலிசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுளைந்துள்ளார்கள்.
மேலும் இவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள , புதரில் ஒரு சடலம் இருப்பதாக தகவல் கிடைக்க அங்கே விரைந்த பொலிசாருக்கு மேலதிக அதிர்சி காத்திருந்தது. அங்கே ரதீஷ் குமார் இறந்து காணப்பட்டுள்ளார். அங்கே என்ன நடந்தது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிசார் கூறியுள்ளார்கள். பிரேதப் பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கிடைக்கும் தகவலை வைத்தே என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியும்.
No comments
Post a Comment