Latest News

May 13, 2015

மைத்திரியின் மெய்பாதுகாப்பாளர்கள் தொடக்கம் பலர் மகிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்-அதிர்ச்சி தகவல்
by admin - 0

மைத்திரி கலந்துகொண்ட கூட்டத்தில் கைத்துப்பாக்கியோடு ஒருவர் வந்தார் என்ற சம்பவத்தை ,விட படுமோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆனால் இதுவரை அது வெளியாகவில்லை. நுகேகொடவில் உள்ள பெப்பிலியானவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் நிகழ்விற்கு பிரதமரும், ஜனாதிபதியும் அழைக்கப்பட்டிருந்தனர். ஜனாதிபதி வெசாக்கூடுகளை பார்வையிட்ட பின்னர் மக்களுடன் உரையாற்றி விட்டு அருகிலுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரை நோக்கி சென்றார். அதன் கதவை திறந்து உள்ளே அமர்ந்த அவர் பாதுகாப்பு பிரிவினரின் வருகைக்காக காத்திருந்தார். சிறிது நிமிடங்களுக்கு பின்னர் அங்கு வந்த பிரதமர் சேர் இது என்னுடைய வாகனம், உங்களுடைய கார் அங்குள்ளது என தெரிவிக்க ஜனாதிபதி சிறிது நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தார்.

அதன் பின்னரே அது தனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகனமில்லை என்பதை அவர் உணர்ந்தார். ஜனாதிபதியை சரியான வாகனத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்வதற்கு ஜனாக்திபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த எவரும் இல்லாததே இங்கு நிகழ்ந்த பெரும் தவறு. இந்த தவறு காரணமாக சிறிசேன தாக்குதலிற்கு உள்ளாகும் ஆபத்துகூட உருவாகியிருக்கும். இதனை தவிர்ப்பதற்காகவே தற்போது தனிப்பட்ட பாதுகாவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். அங்குனுகொலபெலச என்ற இடத்தில் இதைவிட மோசமான பாதுகாப்பு தவறுகள் இதற்கு ஓரு வாரத்திற்கு முன்னரே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமம் மகிந்த ராஜபக்ஷவின் மெதமுலானவிலிருந்து 22 கிலோமீற்றர் தொலைவிலுள்ளது. இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு ஓன்று இடம்பெற்றது. ஜனாதிபதி இதில் உரையாற்றுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதனை தனக்கு அவமானமாக , கருதிய மகிந்த தனது ஊரிலிருந்து புறப்பட்டு நுவரேலியா சென்றார். இதன் காரணமாக அவரது மகன் நாமல் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதென தீர்மானிக்கப்பட்டது. நாமல் முதலில் விசேட பிரமுகர்களின் பிரிவை நோக்கி சென்ற போது அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் பொதுமக்களுக்கான நுழைவாயிலை நோக்கி சென்றார். அந்த பகுதியின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் அவரது நடமாட்டத்தை உன்னிப்பாக அவதானித்த வண்ணமிருந்தனர்.

நாமலுடன் சேர்ந்து உள்ளே நுழைய முயன்ற நபர் ஒருவரின் இடுப்பில் ஏதோ அசைவதை அவர்கள் பார்த்தனர். எனினும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஏ.எஸ்.பி மல்வலகே நாமலையும் அவருடன் வந்த நபரையும் சோதனை செய்யாமல் உள்ளே அனுப்பினார்.எனினும் கூட்டம் நடைபெறவிருந்த பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையை சேர்ந்த ராஜபக்ச மற்றும் சம்பத் என்ற இருவரிற்கு சந்தேகம் ஏற்பட்டது.அவர்கள் வேகமாக நாமலிற்கு அருகில் சென்று அவருடன் வந்த நபரை சோதனை செய்தனர். அவ்வேளை 9MM பிஸ்டல் முழுமையாக தயாரான நிலையில் அவரிடம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

குறிப்பிட்ட நபர் கொமாண்டோ படைப்பிரிவை சேர்ந்த கோப்ரல் சேனககுமார என அடையாளம் காணப்பட்டார். அவரிடமிருந்த துப்பாக்கியால் 25 மீற்றர் வரை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளலாம. ,அந்த நபர் ஜனாதிபதி அமரவிருந்த ஆசனத்திலிருந்து 8 மீற்றர் தொலைவிலேயே நின்றிருந்தார். இதன் காரணமாக அவரால் ஜனாதிபதியை இலகுவாக இலக்கு வைக்க முடிந்திருக்கும். பின்னர் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவரும் குறிப்பிட்ட நபரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரிடம் ஓப்படைத்துள்ளனர். இதன் பின்னரே மர்மான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கைத்துப்பாக்கியுடன் வந்த நபரை ஓரு சில நிமிடங்களில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் விடுவித்துள்ளனர்.அவர் நாமல் ராஜபக்சவின் நபர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேட பொலிஸ் பிரிவினர் இந்த சம்பவம் குறித்து கவனத்திற்கு கொண்டுவந்த பின்னரே அது முக்கியத்துவத்தை பெற தொடங்கியது. பொலிஸ்- மா- அதிபர் விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவின் மிகவும் நேர்மையான அதிகாரி ஓருவரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளன. அவருக்கு அளித்த வாக்குமூலத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவரும் தாங்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்வதற்கு ஏற்ற நிலையிலிருந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றியதை ஓப்புக்கொண்டுள்ளனர். இதுவே நடந்த உண்மைச் சம்பவம். அதாவது மைத்திரியின் மெய்பாதுகாப்பாளர்கள் தொடக்கம் பலர் மகிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

« PREV
NEXT »

No comments