Latest News

May 13, 2015

புலி படம் பற்றி புதிய தகவல்
by admin - 0

vijay new film
கோலிவுட் இயக்குநர்களின் பார்வை திடீரென பல்கேரியா நாடு மீது திரும்பி உள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தின் பாடல் காட்சிகள் பல்கேரியா நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
மாஸ் படம் வரும் 29 அன்று வெளியாக உள்ளநிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் படப்பிடிப்பை பல்கேரியாவில் நடத்தி வருகிறார்கள்.  அங்கு பாடல்காட்சிகளை படமாக்கிவிட்டு விரைவில் திரும்ப உள்ளது புலி படக்குழு.
இதற்கிடையில் புலி படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் ஆகியவை எப்போது வெளிவரும் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதோடு, புலி படம் எப்போது ரிலீஸாகும் என்பதும் இதுவரை சஸ்பென்ஸாகவோ இருந்து வருகிறது..  தற்போது அந்த சஸ்பென்ஸ் உடைந்திருக்கிறது.
சூர்யாவின் மாஸ் படம் வெளியான பிறகு, அதாவது மே மாத இறுதியில் 'புலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர்  விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதிவெளியாகும் என சொல்லப்படுகிறது.  விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.  
இப்படத்தில் கிராபிக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறதாம். எனவே போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படும் என்று சொல்லிவிட்டாராம் சிம்புதேவன்.
ஒருவேளை கிராபிக்ஸ் முடியாமல் இழுத்துக்கொண்டு போனால், ரிலீஸை, தீபாவளிக்கு தள்ளி வைக்கும் எண்ணமும் தயாரிப்பாளருக்கு உள்ளதாம்.
« PREV
NEXT »

No comments