Latest News

May 24, 2015

ஜெயலலிதாவின் பொழுதுபோக்கு... விவசாயம்
by admin - 0

சென்னை: தமிழக முதல்வர் பதவிக்கு ஜெயலலிதா வந்துள்ளதால் அரசு இணையதளங்களிலும் உடனடியாக மாற்றங்கள் வந்து விட்டன. அனைத்துத் தளங்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படம், தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசின் http://www.tn.gov.in/ இணையதளம் மற்றும் செய்தி மக்கள் விளம்பரத்துறை இணையதளம் உள்ளிட்ட அனைத்து இணையதளங்களிலும் முதல்வர் பெயர் ஜெயலிதா என்று மாற்றப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் முதல்வரான போது இப்படி உடனடியாக மாற்றம் செய்யப்படவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியது. எனவே மீண்டும் அதுபோன்ற "சர்ச்சை" வந்து விடாத வண்ணம் அரசுத் தரப்பில் துரிதமாக செயல்பட்டிருக்கிறார்கள் போலும். http://www.tn.gov.in இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் குறிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் பிறந்த. ஊர், பிறந்த தேதி, அவரது கல்வித் தகுதி, சமுதாயப் பணிகள், வாங்கிய பட்டங்கள், பெற்ற பெருமைகளை பட்டியலிட்டுள்ளனர்.

அவர் ஆங்கிலம்,தமிழ் ஆகிய மொழிகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளதாகவும், தமிழில் நான்கு முழு நீள நாவல்களும், பல சிறு கதைகள் எழுதியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு பிடித்த விளையாட்டுகள், கிரிக்கெட், டென்னிஸ், நீந்துதல், குதிரை ஏற்றம், கூடைப்பந்து, சதுரங்கம், உடற்பயிற்சி விளையாட்டுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோக அவரது தனித் திறமைகள், பன்மொழி பேசும் திறமை உள்ளிட்டவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். அவரது பொழுது போக்காக படித்தல், இசை ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், விவசாயமும் அவரது பொழுதுபோக்குகளில் ஒன்று என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments