Latest News

May 25, 2015

நல்லாட்சியில் எந்த நன்மையுமில்லை-பொன்சேகா
by Unknown - 0

ஜனவரி மாதம் 8 ஆம் திகதியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியில் எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை. எனக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதியம் மட்டும் கிடைத்தது தவிர அரசால் எனக்கு எரிபொருள் கூட கிடைக்கவில்லை என ஜனநாயக கட்சியை சார்ந்த ஆதரவாளர்களின் எந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அதனால் அரசிடம்  எமக்கு எந்தவொரு விருப்பும் இல்லை என ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட்மாஸ்டர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கேகாலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஆட்சியாளரை விமர்சித்து தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தவில்லை. எமது கட்சிக்கு பொதுவான கொள்கை திட்டம் உள்ளது. எனது அரசியலுக்கு 5 வருடம் ஆகின்றது. அதில் இரண்டரை வருடம் சிறையில் கழித்தேன். சிறையிலிருந்து வெளியே வரும்போது புதிய அரசியலை முன்னெடுத்து செல்லும் கொள்கையில் வெளியே வந்த போது பசில் ராஜபக்ச சிறையில் உள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்த போது எமது கட்சி கூட்டங்கள் நடத்த கூட இடம் வழங்கப்படவில்லை. இதற்கு முன்  கேகாலை நகரில் வாகனத்தின் மேல் ஏறி கூட்டம் நடத்தினோம். அந்நேரத்தில் இங்குள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி  எம்மை வந்து மிரட்டினார். சுதந்திரமான அரசியல் நடத்த முடியாமல் இருந்து அவ்வாறான நிலைமையில் தான் மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்து வந்தார்.

அவர்கள்  செய்ததை இன்று அனுபவிக்கின்றனர். எமது நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருந்து வந்த பிரபாகரனை ஒழித்து விட்டோம். அதற்கு பிறகு எமக்கு தடையாக இருந்தவர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்.

இன்று நாட்டில் ஒரு கட்சிக்கும் அரசியல் நடத்த சுதந்திரம் கிடைத்துள்ளது. அரச ஊழியர்களுக்கு தங்களது கடமையை செய்ய எந்தவொரு அரசியல் அழுத்தமும் இல்லை.

நல்லாட்சியில் நாட்டை வழி நடத்தி சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.      
« PREV
NEXT »

No comments