மீண்டும் அரசியலில் குதிக்கத் தயாராகி வரும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிழல் அமைச்சரவை ஒன்றை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிழல் அமைச்சரவையில் 5 முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வாரம்தோறும் இந்த நிழல் அமைச்சரவையைக் கூட்டி, மகிந்த ராஜபக்ச ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
நாட்டின் அரசியல் நிலவரங்கள் குறித்தும், கொள்கைகள், அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான வியூகங்கள் குறித்தும், இந்த நிழல் அமைச்சரவைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment