Latest News

May 24, 2015

நடுத்தெருவில் 16 வயது இளம்பெண்ணை அடித்து, உதைத்து, தீயிலிட்டு கொளுத்திக் கொன்ற கும்பல்
by admin - 0



மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ அருகேயுள்ள குவாடெமலா பகுதியில் 16 வயது இளம்பெண்ணை அடித்து, உதைத்து, சிதரவதை செய்த ஒரு கும்பல் அவரை கதறக்கதற தீயில் போட்டு கொளுத்திக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

ரியோ பிரவோ நகரில் வசித்துவந்த அந்த இளம்பெண், அப்பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவரை கொன்றதாக குற்றம்சாட்டி இந்த கொடூரத்தை அந்த கும்பல் அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த கோரக்காட்சியை கண்டு கொதிப்படைந்துப்போய் இருக்கும் சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த ஈவிரக்கமற்ற சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்
கொடுரமான ஒளிப்பதிவு என்பதால் இணைக்கப்படவில்லை
« PREV
NEXT »

No comments