Latest News

May 06, 2015

ஜேர்மன் விமான விபத்து;திட்டமிட்டே விபத்தை நிகழ்த்தப்பட்டுள்ளது-ஜேர்மன் நாளிதழ்
by Unknown - 0

ஜேர்மன் விமான விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜேர்மன் விங்க்ஸ் என்ற விமானம் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 150 பேர் பலியாகினர்.

கடந்த மார்ச் மாதம் 24- ஆம் திகதி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜேர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜேர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்பட 150 பேரும் பலியாகினர்.

துணை விமானி Andreas Lubitz விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் மோதியது கருப்புபெட்டியின் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில், துணை விமானி விமானத்தை எந்தவித தொழில்நுட்ப காரணங்களும் இல்லாமல் நீண்ட நேரம் தாழ்வாக விமானத்தை பறக்கவைத்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அவர் திட்டமிட்டே விபத்தை நிகழ்த்தியுள்ளார் என்று ஜேர்மன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments