Latest News

May 06, 2015

மைத்திரி மகிந்த சந்திப்பு படுதோல்வி மகிந்த பிரதம வேட்பாளராக கொண்ட புதிய அணி இறக்கப்படுகிறது???
by admin - 0

நேற்று மைத்திரி மகிந்தவுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தை படு தோல்வி என இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகல் 12.45 மணிக்கு பாராளுமன்றம் வந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ 1.45 மணிக்கே பாராளுமன்றம் சென்றுள்ளார். ஒரு மணிநேரம் தாமதம். ஜனாதிபதியுடன் வந்த இருவருக்கு எதிர்ப்பு தெரிவித்தே மஹிந்த ஒரு மணித்தியாலம் தாமதித்து வந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரியுடன் பேச்சுவார்த்தைக்கு பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் வருவார்கள் என முன்னதாக கருதப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் அந்த தீர்மானத்தை மாற்றி மைத்திரிபால ஜனாதிபதியுடன் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் வந்ததை மஹிந்த விரும்பவில்லை. இதற்கு மஹிந்த குழுவின் டளஸ், குமார வெல்கம, பந்துல ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன போன்ற வாழ்க்கை முழுதும் பொலிஸ் நாய்களை காத்தவர்கள் மற்றும் துமிந்த திஸாநாயக்க போன்று சிறியவர்கள் அழைத்து வரப்பட்டமை முன்னாள் ஜனாதிபதிக்கு செய்யும் அகௌரவம் என்று எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ஒரு மணிநேரம் தாமதமாகி வந்தார். 45 நிமிடங்கள் கூட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஊடகங்களுக்கு எவ்வித கருத்தும் தெரிவிக்காது மைத்திரி - மஹிந்த வெளியேறினர்.

இந்த பேச்சுவார்த்தை மகிந்தவை கடுப்பாக்கியதாம் எனவே தான் பிரதமர் வேட்பாளராக வந்து அதில் வெற்றி பெற்று இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவேன் என தனது நெருங்கிய சகாக்களுக்கு தெரிவித்ததாக அறிய வருகிறது . 

மகிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டால் சுகந்திர கட்சி பாரிய தோல்வியடையும் மகிந்தவின் கட்சியும் பெரும்பான்மை பெறாது ஆகவே ரணில் இதில் நன்மை அடைய வாய்ப்புள்ளது .

« PREV
NEXT »

No comments