முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு சரத் பொன்சேகா அளித்த செவ்வி வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
பாரியளவிலான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பிலான விசாரணைகளை எதிர்நோக்கத் தயார் என சரத்பொன்சேகாவின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா மெய்யாகவே அப்பாவியாக இருந்தால், தாமாகவே சர்வதேச விசாரணைகளுக்கு முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதி நாட்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட சர்வதேச விசாரணைகளுக்கு தயாரா என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடர வேண்டுமெனக் கோரி ஒரு மில்லியன் கையொப்பங்கள் 15 மொழிகளில் திரட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment