ஆயுதப்போராட்டம் முடிவுற்றதே தவிர அதற்குப் பின்னரான காலத்தில் போருக்குக் காரணமான அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.அதனால் போரால் என்ன செய்ய நினைத்தார்களோ அதனை வேறு பல வழிகளால் அந்தந்த அரசுகள் செய்ய முற்படுவது தான் இங்குள்ள வித்தியாசம்.அவற்றில் ஒன்று தான் வடக்கில் புகைப்பொருள் பாவனை என்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் நேற்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு மாகாணம் போருக்குப் பின்னர் அரசியல் தீர்வு எட்டப்பட்ட முரண்பாடுகளற்ற மாகாணமாக காணப்படாது, போருக்குப் பின்னரான முரண்பாடுகளுடனான மாகாணமாகவே காணப்படுகின்றது.
போதைப் பொருள் சார்ந்த பாவனையாளர்களால் ஏற்படுத்தப்படுகின்ற சுகாதாரம் சார்ந்த பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.புகைத்தலால் வருடாந்தம் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.அவர்களில் 6லட்சம் பேர் தாமாகப் புகைபொருள்களைப் பயன்படுத்தாது,பெற்றோர் அவரது குடும்ப உறுப்பினர்கள் புகைப்பதனால் பொது இடங்களில் புகைப்பதனால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இது கொலையும்,தற்கொலையும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment