Latest News

May 29, 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குறுதியால் சம்பூர் மக்கள் ஏமாற்றம்
by admin - 0



news sampoor

சம்பூர் பகுதியில் உள்ள காணிகளுக்கு செல்லுதல், துப்புரவாக்குதல், மற்றும் தற்காலிக குடிசைகள் அமைத்தல் என்பவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சம்பூர், மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இணைந்து இன்று காலை 7 மணியளவில் சம்பூர் காணியில் துப்புரவுப்பணியில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
எதிர் வரும் 16 ஆம் திகதிக்குப் பின்னர் சம்பூர் பகுதியில் காணிகளை துப்புரவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடமுடிவதுடன் சிறிய தற்காலிக குடிசைகளையும் அங்கு அமைக்க முடியும் என பொலிஸ் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காணிகளை துப்புரவு செய்த மக்கள் இடைநடுவே வேலையை விட்டுவிட்டு காணிக்கு வெளியில் ஒன்றுகூடி நிற்கின்றனர்.
இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மூதூர் பிரதேச சபை உறுப்பினர் நாகேஸ்வரன், குறித்த பிரச்சினையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு தெளிவுபடுத்த தற்போது கொழும்பு நோக்கி கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் மாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரன் சென்றுகொண்டிருப்பதாக பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் மக்களிடம் கூறி குழப்பநிலையைத் ஏற்படுத்தியுள்ளார்.
இதேவேளை, சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி உச்ச நீதிமன்றம், மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த நிலையில் அப்பகுதிக்கு சென்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ்பிரேமசந்திரன் காணி உரிமையாளர்களிடம், உங்கள் காணிகளுக்கு இன்று முதல் சென்று பார்வையிட்டு காணிகளை துப்புரவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட முடிவதுடன் தற்காலிக குடிசைகளையும் அமைத்து இருக்க முடியும் என வாக்குறுதி வழங்கியுள்ளார்.
அத்துடன் கிழக்குமாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரனும் அந்த மக்களிடம், காணிகளில் வீடமைத்து இருக்க முடியும் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இந்நிலையில் மேற்கூறப்பட்டவர்களின் வாக்குறுதியை நம்பி முகாமில் தங்கியிருந்த சம்பூர் மக்கள், தற்காலிக குடிசை அமைப்பதற்கு தேவையான மரம், தடி, தகரம் என்பவற்றை சம்பூர் பகுதிக்கு கொண்டுசென்று காணிகளை துப்புரவாக்கும் பணியை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சம்பூர் பகுதிக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கமாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, துப்புரவுப்பணியில் ஈடுபட்டவர்களிடம், நீங்கள் காணிகளை துப்புரவு செய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும் இங்கு தற்காலிக குடிசை தற்போது அமைக்க முடியாது எனவும் கூறி தடுத்திருந்தார்.
அடுத்து மூதூர் பிரதேச செயலரும் நேற்று முன்தினம் அப் பகுதிக்கு சென்று மக்களிடம் துப்புரவு செய்வதை நிறுத்துமாறு கோரியுள்ள நிலையைத் தொடர்ந்து இன்றைய தினம் பொலிஸாரும் தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதேவேளை, பல ஆண்டுகாலம் சொந்த நிலத்தில் குடியேற ஆசையுடன் இருந்த எமக்கு இடையிடையே தடையுத்தரவும் போலி வாக்குறுதிகளும் வழங்கப்பட்டமையானது எமது ஆசையை நிராசையாக்கி இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments