Latest News

May 12, 2015

குலுங்கியது இந்தியா, ஆப்கான், சீனா, நேபாளம்! உலகம் முழுவதும் 82 இடங்கள் அதிர்ந்தன!!
by admin - 0

டெல்லி/காபூல்: இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளின் 82 இடங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பட்டகாலிலேயே படும் என்பதைப் போல நேபாளத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தை புரட்டியெடுத்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. 80 ஆண்டுகளுக்குப் பின்பு ஏற்பட்ட இப்பயங்கர நிலநடுக்கம் நேபாள நாட்டை உருக்குலைத்து போட்டுள்ளது.


இதன் தாக்கமாக இந்தியா, திபெத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்தியாவில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்துக்கு பலியாகினர். இந்த சோக வடு இன்னமும் ஆறாத நிலையில் இன்றும் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகள் குலுங்கின. அதே நேரத்தில் இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்க அளவு 7.5 ரிக்டராக பதிவாகி இருந்தது. சீனாவிலும் 7.4 ரிக்டராக நிலநடுக்கம் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது திபெத் பிராந்தியத்தில் சீனா-நேபாள எல்லையில் நேபாள பகுதிக்குள் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


« PREV
NEXT »

No comments