இதனையடுத்து வீடுகளை விட்டு மக்கள் அலறியடித்து வெளியேறி சாலைகளில் குவிந்துள்ளனர். இந்நடுக்கமானது பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வடமாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இந்தோனேஷியாவிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் ஆப்கன் நிலநடுக்கம் 4.7ஆகவும், இந்தோனேஷியாவில் 5.1 அலகுகாளாகவும் பதிவாகியுள்ளது. டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் 1 நிமிடம் உணரப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மெட்ரோ ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் பதிவாகிய 7.4 என்ற ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமே இந்த நில அதிர்வுகளுக்கு காரணம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜெய்ப்பூர், ராஞ்சி, லக்னோ, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. சென்னையில் சாந்தோம், கோடம்பாக்கம், சூளைமேடு பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் கட்டிடங்கள் ஆடியதால் மக்கள் அதிர்ச்சியில் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறினர். வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு அருகில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
No comments
Post a Comment