இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியை வெற்றிகொண்ட 70-ம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து ரஷ்யா பெரும் இராணுவ அணிவகுப்பு ஒன்றை மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நடத்துகின்றது.
யுக்ரெய்ன் பிரச்சனையில் ரஷ்யாவின் தற்போதைய பங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்குலகத் தலைவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
சீன அதிபர் க்ஷி ஜிங்பிங் சிறப்பு விருந்தினராக இந்த அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் கூட்டாளிகளாக இருந்த ஐரோப்பிய மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீன் இன்றைய நிகழ்வில் தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.
ஆனால், உலகப் போருக்குப் பின்னரான உலகின் அடித்தளமாக விளங்கிய சர்வதேச கூட்டுறவு என்ற கொள்கை கடந்த 10 ஆண்டுகளில் கணக்கில் எடுக்கப்படாமல் விடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் தெரிவித்தார்.
No comments
Post a Comment