Latest News

May 09, 2015

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு 3 வருட சிறைத்தண்டனை!
by Unknown - 0

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு ஊழல் வழக்கில் 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை புனரமைப்பின் போது இடம்பெற்ற 14 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் மறு விசாரணை இடம்பெற்ற போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் அவரது மகன்களுக்கும் தலா 4 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு கிளர்ச்சியின் பின்னர் ​ஹொஸ்னி முபாரக் பல விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வந்தார்.

கைதாகி சிறைச்சாலையில் உள்ள நிலையில், அவர் எதிர்கொண்ட இறுதி வழக்கு விசாரணையின் போதே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments